பிறவி குறைபாட்டால் பாதிக்கப்பட்ட 10,176 குழந்தைகளுக்கு சிகிச்சை
பிறவி குறைபாட்டால் பாதிக்கப்பட்ட 10,176 குழந்தைகளுக்கு சிகிச்சை
ADDED : ஜன 22, 2025 11:59 PM
சென்னை:தமிழகத்தில் பிறவி குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட, 10,176 குழந்தைகளுக்கு தேசிய குழந்தைகள் நல திட்டத்தில், அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக, பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தேசிய குழந்தைகள் நல திட்டத்தை, 2013ல் மத்திய அரசு நடைமுறைப்படுத்தியது. பிறந்த குழந்தை முதல், 18 வயது வரை உள்ள அனைவருக்கும் பாதிப்புகள் உள்ளனவா என்பதை துவக்கத்திலேயே கண்டறிந்து, அதற்கான சிகிச்சை அளிக்கும் திட்டம் இது. 30 வகையான குறைபாடுகள் பட்டியல் இடப்பட்டுள்ளன.
அந்த பரிசோதனையில், பிறவிலேயே உள்ள பாதிப்புகள், பிறந்த பின் ஏற்படும் குறைபாடுகள், நோய்கள், வளர்ச்சி குறைபாடுகள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஆண்டுதோறும், 1.45 கோடி குழந்தைகளுக்கு பரிசோதனை நடத்தப்படுகிறது.
2024ல் 4.35 லட்சம் பேருக்கு பாதிப்பு; 2.99 லட்சம் குழந்தைகளுக்கு சிகிச்சை
2021 முதல் தற்போது வரை 10,176 குழந்தைகளுக்கு பெரிய பாதிப்புகளுக்கான சிகிச்சை
இப்பணிகளில், 805 பேர் ஈடுபட்டு வருகின்றனர். பொது சுகாதார துறையின், 15வது காலாண்டு இதழ் ஆய்வு கட்டுரையில், இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

