உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : மே 20, 2026 01:00 AM
அ நிறம் | அளவு
சென்னை: 'திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், நேற்று மாலை நிலவரப்படி, 104 டிகிரி பாரன்ஹீட் அதாவது 40 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவானது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில், கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் கடுமையாக உயர்ந்து வருகிறது. நேற்று மாலை நிலவரப்படி, அதிகபட்சமாக திருத்தணியில், 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இதற்கு அடுத்தபடியாக, சென்னை மீனம்பாக்கத்தில் 103, வேலுாரில் 101, தர்மபுரி, ஈரோடு, மதுரை, திருச்சி நகரங்களில் தலா, 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பகலில் அதிக வெப்பம் பதிவான நிலையில், சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், மாலை லேசான மழை பெய்தது.
