தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/105 தனியார் பள்ளிகள் தொடங்க அனுமதி

105 தனியார் பள்ளிகள் தொடங்க அனுமதி

105 தனியார் பள்ளிகள் தொடங்க அனுமதி


UPDATED : நவ 29, 2026 12:00 AM

ADDED : நவ 28, 2026 08:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 29, 2026 12:00 AM ADDED : நவ 28, 2026 08:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தமிழகத்தில், புதிதாக 51 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் உட்பட, 105 தனியார் பள்ளிகள் தொடங்க, அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன.

இதையடுத்து, தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குதல் உள்ளிட்ட செயல்பாடுகள், கடந்த ஜூலை மாதம் 1ம் தேதி ‘ஆன்லைன்’ முறைக்கு மாற்றப்பட்டன.

கடந்த ஜூலை மாதம் முதல், தற்போது வரை, மெட்ரிக் பள்ளிகள், நர்சரி மற்றும் பிரைமரி, சி.பி.எஸ்.இ., சுய நிதி மேல்நிலைப் பள்ளி, மழலையர் பள்ளி உட்பட, 4,180 பள்ளிகள் அங்கீகாரம் புதுப்பிப்புக்கு விண்ணப்பித்து, அவற்றுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், 105 தனியார் பள்ளிகள், புதிதாக தொடங்க விண்ணப்பித்து, அதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதில், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் 51; மழலையர் பள்ளி 20; மெட்ரிக் பள்ளி 10 ஆகும். இது தவிர மற்றவை, நர்சரி மற்றம் பிரைமரி பள்ளிகள், சுய நிதி மேல்நிலைப்பள்ளி போன்றவற்றை தொடங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, 96 பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us