தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/பட்டா பிரச்னையில் மேல்முறையீடு மனுக்கள் தேக்கம்: மக்கள் அவதி

பட்டா பிரச்னையில் மேல்முறையீடு மனுக்கள் தேக்கம்: மக்கள் அவதி

பட்டா பிரச்னையில் மேல்முறையீடு மனுக்கள் தேக்கம்: மக்கள் அவதி


UPDATED : நவ 29, 2026 12:00 AM

ADDED : நவ 28, 2026 08:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 29, 2026 12:00 AM ADDED : நவ 28, 2026 08:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சொத்து பட்டா தொடர்பான பிரச்னையில், மேல்முறையீட்டு மனுக்கள் விசாரிக்கப்படாமல் கிடப்பில் போடப்படுவதாக, பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் வீடு, மனை போன்ற சொத்துக்கள் வாங்குவோர், அதற்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும். இதற்கான நடைமுறைகளை, வருவாய் துறை எளிமைப்படுத்தி உள்ளது.

இதன்படி, பட்டா பெயர் மாற்றம் தொடர்பாக, தாசில்தார் அல்லது அவரக்கு இணையான அதிகாரி உத்தரவிடலாம்.

இந்த உத்தரவில், விண்ணப்பதாரர் அல்லது வேறு நபர்களுக்கு ஆட்சேபம் வர வாய்ப்புள்ளது. உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட நிலத்துக்கு பட்டா மாற்றம் செய்யப்படும்போது, அதில் அடுத்த நிலத்தில், ‘சர்வே’ எண்ணும் சேர்ந்து வர வாய்ப்புள்ளது. அதை சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்கள் ஆட்சேபிக்கலாம்.

இத்தகைய ஆட்சேபனை இருப்பவர்கள், தாசில்தார் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம். தாசில்தார் உத்தரவிட்டதில் இருந்து, 30 நாட்களுக்குள், ஆர்.டி.ஓ., எனப்படும் வருவாய் கோட்டாட்சியரிடம் மேல்முறையீடு செய்யலாம். இவ்வாறு மேல்முறையீடு செய்தால், சம்பந்தப்பட்ட மனுக்கள் விசாரிக்கப்படுவதில்லை என, பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மேல்முறையீடு செய்து காத்திருப்போர் கூறியதாவது:

மேல்முறையீடு செய்தால், அதை உரிய காலத்தில் வருவாய் கோட்டாட்சியர் விசாரித்து, உரிய உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும். ஆனால், வருவாய் கோட்டாட்சியர்கள் தங்கள் பணிச்சுமையை காரணம் காட்டி, இந்த மனுக்களை விசாரிப்பது இல்லை.

இது தொடர்பாக, கலெக்டரிடம் முறையிட்டாலும் தீர்வு கிடைப்பதில்லை. அதே நேரத்தில், நில நிர்வாகத் துறை ஆணையர், இதுபோன்ற மேல்முறையீடுகளை தானாக முன்வந்து விசாரிக்கலாம் என்ற வழிமுறை உள்ளது.

இந்த நடைமுறைகளை, வருவாய் கோட்டாட்சியர்களும், நில நிர்வாகத் துறையும் கடைபிடிக்காததால், அனைத்து மாவட்டங்களிலும் மேல்முறையீட்டு மனுக்கள் கிடப்பில் போடப்படுகின்றன.

தற்போதைய நிலவரப்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா, 400க்கும் மேற்பட்ட மேல்முறையீடுகள் நிலுவையில் இருக்கின்றன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us