உள்ளடக்கத்திற்கு செல்ல
இன்ஜி., அரியர் மாணவர்களுக்கு டிச., 21 முதல் சிறப்பு தேர்வு
இன்ஜி., அரியர் மாணவர்களுக்கு டிச., 21 முதல் சிறப்பு தேர்வு
UPDATED : நவ 29, 2026 12:00 AM
ADDED : நவ 28, 2026 08:44 PM
அ நிறம் | அளவு
சென்னை: அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும், பொறியியல் கல்லுாரிகளில், 2008, 2013, 2017ம் ஆண்டுகளில், முதலாம் ஆண்டு சேர்ந்த மாணவர்களால், நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள், தங்கள் படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியவில்லை.
இந்த மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் வைத்து, அவர்கள் தங்களின் படிப்பை நிறைவு செய்ய ஏதுவாக, சிறப்பு அரியர் தேர்வெழுத அனுமதி வழங்கப் படுகிறது.
மாணவர்கள், coe.anna university.edu என்ற இணையதளம் வழியே, டிச., 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
சிறப்பு அரியர் தேர்வு, டிச., 21ம் தேதி தொடங்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
