'108' ஆம்புலன்ஸ் சேவை; தீபாவளிக்கு 7,463 பேர் பயன்
'108' ஆம்புலன்ஸ் சேவை; தீபாவளிக்கு 7,463 பேர் பயன்
ADDED : அக் 22, 2025 06:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழகம் முழுதும் வழக்கமான நாட்களை விட, தீபாவளி அன்று, 48 சதவீதம் பயனாளிகள், கூடுதலாக 108 ஆம்புலன்ஸ் வழியே பயன்பெற்றுள்ளனர்.
தீபாவளி அன்று பொதுமக்களுக்கு உதவுவதற்காக, 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. மக்கள் அவசர காலத்திற்கு அழைக்கும், 108, 104, 102 அவசர கால பதில் அளிப்பு மையங்கள், கடந்த 19ம் தேதி முதல் மூன்று ஷிப்ட் ஊழியர்களுடன், முழுமையாக செயல்பட்டன.
வழக்கமான நாட்களில், 5,051 பேர் 108 ஆம்புலன்ஸ் சேவை பெற்று பயனடைவர். தீபாவளி அன்று 7,463 பேர் பயன்பெற்றுள்ளனர். அதாவது, வழக்கமான நாட்களை விட, 48 சதவீதம் பேர் கூடுதலாக பயன்பெற்றுள்ளனர்.