உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : மே 22, 2026 07:42 AM
அ நிறம் | அளவு
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நேற்று 18 நகரங்களில், வெயில், 100 டிகிரி பாரன்ஹீட், அதாவது 38 டிகிரி செல்ஷியசுக்கு மேல் பதிவானது. அதிகபட்சமாக, வேலுாரில், 108 டிகிரி பாரன்ஹீட், அதாவது 42.5 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.
இதற்கு அடுத்தபடியாக, ஈரோட்டில், 105 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. கரூர், மதுரை, திருச்சியில் தலா, 104 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவானது.
சென்னை மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், கடலுார், தர்மபுரி, நாமக்கல், பாளையங்கோட்டை, பரங்கிப்பேட்டை, புதுச்சேரி, சேலம், தஞ்சாவூர், திருப்பத்துார், திருத்தணி, துாத்துக்குடி ஆகிய நகரங்களில், 100.4 பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவானது என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
