தமிழில் 8 பேர் மட்டுமே சதம்: கணிதத்தில் 20,691 பேர்: முழு விபரம்
தமிழில் 8 பேர் மட்டுமே சதம்: கணிதத்தில் 20,691 பேர்: முழு விபரம்
UPDATED : மே 10, 2024 06:06 PM
ADDED : மே 10, 2024 10:33 AM

சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. அதில் தமிழில் 8 பேர் மட்டுமே நூற்றுக்கு நூறு எடுத்தனர். அதிகபட்சமாக கணிதத்தில் 20,691 மாணவர்கள் நூற்றுக்கு நூறு எடுத்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொசவபட்டியைச் சேர்ந்த மாணவி ஒருவர் 500க்கு 499 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
இது குறித்த முழு தகவல்கள்:
100 சதவீத மதிப்பெண்கள் பெற்ற மாவர்களின் எண்ணிக்கை
தமிழ் -8 பேர்
ஆங்கிலம்415 பேர்
கணிதம் 20691 பேர்
அறிவியல் 5104 பேர்
சமூக அறிவியல் 4428 பேர்
பள்ளிகள் வகைப்பாடு வாரியான தேர்ச்சி விகிதம்
அரசுப் பள்ளிகள் -87.90 %
அரசு உதவி பெறும் பள்ளிகள் - 91.77%
தனியார் சுயநிதிப் பள்ளிகள்- 97.43%
இருபாலர் பள்ளிகள்- 91.93%
பெண்கள் பள்ளிகள்- 93.80%
ஆண்கள் பள்ளிகள்- 83.17%
பாடவாரியாக தேர்ச்சி விகிதம்
தமிழ் மற்றும் இதர மொழிப்பாடம்- 96.85%
ஆங்கிலம் -99.15%
கணிதம் -96.78%
அறிவியல்- 96.72%
சமூக அறிவியல்- 95.74%
மாற்றுத்திறனாளி மாணவர்கள் 13,510 பேர் தேர்வு எழுதினர். அதில் 12,491 பேர் (92.45%) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்260 சிறைவாசிகள் தேர்வு எழுதினர். அதில் 228 பேர் (87.69%)தேர்ச்சி பெற்றனர்.
மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
அரியலூர் -97.31
சிவகங்கை 97.02
ராமநாதபுரம்-96.36
கன்னியாகுமரி-96.24
திருச்சி-95.23
விருதுநகர்-95.14
ஈரோடு-95.08
பெரம்பலூர்-94.77
தூத்துக்குடி-94.39
விழுப்புரம்-94.11
மதுரை-94.07
கோவை-94.01
கரூர்-93.59
நாமக்கல்-93.51
தஞ்சாவூர்-93.40
திருநெல்வேலி-93.04
தென்காசி-92.69
தேனி-92.63
கடலூர்-92.63
திருவாரூர்-92.49
திருப்பூர்-92.38
திண்டுக்கல்-92.32
புதுக்கோட்டை-91.84
சேலம்-91.75
கிருஷ்ணகிரி-91.43
ஊட்டி-90.61
மயிலாடுதுறை-90.48
தர்மபுரி-90.45
நாகப்பட்டினம் -89.70
சென்னை- 88.21
திருப்பத்தூர்- 88.20
காஞ்சிபுரம்-87.75
செங்கல்பட்டு-87.38
கள்ளக்குறிச்சி-86.83
திருவள்ளூர்-86.52
திருவண்ணாமலை-86.10
ராணிப்பேட்டை-82.48
வேலூர்-82.07
காரைக்கால்-78.20
புதுச்சேரி-91.28
தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு
2020ம் ஆண்டில் 9,39,829 பேர் தேர்வு எழுதியதில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.
2021 ல் 9,60,216 பேர் தேர்வு எழுதியதில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.
2022ல் 9,12,620 பேர் தேர்ச்சி எழுதியதில் 8,21,994(90.07%) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
2023ம் ஆண்டில் 9,14,320 பேர் தேர்வு எழுதியதில் 8,35,614 பேர்(91.39%) தேர்ச்சி பெற்றனர்.
2024ல் 8,94, 264 பேர் தேர்வு எழுதியதில் 8,18,743 பேர்(91.55) பேர் தேர்ச்சி பெற்றனர்.
ஸ்டாலின் பாராட்டு!
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்; மாணவர்கள் எதிர்காலத்தை திட்டமிட்டு அடித்தளத்தை வலிமையாக அமைத்துக்கொள்ள வேண்டும். குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் அடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள் எனக்கூறியுள்ளார்.