ADDED : ஜூலை 13, 2011 11:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே, பணம் வைத்து சூதாடிய 11 பேர் கைது செய்யப்பட்டனர்; அவர்களிடமிருந்து, 5.32 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் தாமிரபரணி ஆற்றங்கரை அருகே, நேற்று முன்தினம் இரவு, போலீசார் ரோந்து சென்றனர். அங்கு வாட்டங் டேங்க் அருகே பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த ஏரல் மற்றும் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த ஆத்தரங்கரையான், 37,, கணேசதுரை 35, உட்பட 11 பேரை, போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 5 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய், கேஸ் லைட் மற்றும் 18 மொபைல் போன்கள் பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடிய ஏழு பேரை தேடி வருகின்றனர்.

