உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஏப் 19, 2026 02:44 AM
அ நிறம் | அளவு
சென்னை: தமிழகத்தில் நேற்று 11 நகரங்களில், வெயில் சதம் அடித்தது.
தமிழகம் முழுதும் கோடை வெப்பம் சுட்டெரிக்க துவங்கி விட்டது. நேற்றும் மாநிலம் முழுதும் வெயில் அதிகம் காணப்பட்டது. அதிகபட்சமாக, கரூர் பரமத்தியில் 106.7 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.
அதற்கு அடுத்தபடியாக, வேலுார் 104.18; ஈரோடு 103.64; திருப்பத் துார் 102.38; தர்மபுரி மற்றும் மதுரையில் 102.2; திருச்சி 102.02; நாமக்கல் 101.66; கோவை 101.48; திருநெல்வேலி, சேலம் ஆகிய இடங்களில் தலா 100.4 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.
