UPDATED : மே 03, 2025 08:58 PM
ADDED : மே 03, 2025 08:48 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழகத்தில் இன்று 11 நகரங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது. அதிகபட்சமாக வேலூரில் 105.8 ஆக பதிவானது.
கோவை துவங்கியது முதல் தமிழகத்தின் பல நகரங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால், மக்கள் அவதியடைந்து வருகின்றனர். கத்தரி வெயில் நாளை துவங்கி வரும் 28 வரை நீடிக்க உள்ளது.
இந்நிலையில், இன்று தமிழகத்தில் 11 நகரங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட் பதிவாகி உள்ளது.
அதன் விவரம்:
வேலூர் 105.8
திருத்தணி 104
திருச்சி 103.46
சென்னை மீனம்பாக்கம் 103.2
கரூர் பரமத்தி 103
விமான நிலையம் 103
கடலூர் 101.84
மதுரை 101. 48
ஈரோடு 102.56
சேலம் 101.48
நாகை 100.94