11ம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்தி கொலை; கன்னியாகுமரியில் விபரீதம்
11ம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்தி கொலை; கன்னியாகுமரியில் விபரீதம்
ADDED : ஏப் 28, 2025 12:20 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் 17 வயது 11ம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி அருகே மாதவபுரம் பகுதியில் கோவில் விழாவிற்கு, 17 வயது 11ம் வகுப்பு மாணவன் சென்று இருந்தான். அங்கு மாணவனை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு ஆட்டோ டிரைவர் சந்துரு தப்பி ஓட்டம் பிடித்தார்.
இவரை கூடங்குளத்தில் வைத்து கன்னியாகுமரி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவிழாவின் போது எந்த ஊர் என்ற பிரச்னையில் பரஸ்பரம் வாக்குவாதம் ஏற்பட்டு கொலையில் முடிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

