ADDED : ஆக 19, 2025 06:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழகத்தின் பல பகுதிகளில் பணிபுரிந்து வரும், டி.எஸ்.பி.,க்கள், 12 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர் நகர குற்ற ஆவண காப்பக பிரிவு டி.எஸ்.பி., செங்குட்டுவன்; சென்னை போதைப் பொருள் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., ராகவி; நாகப்பட்டினம் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி., செந்தில்; திருவள்ளூர் மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரிவு டி.எஸ்.பி., மணிமேகலை ஆகியோர், சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.
இவர்கள் தவிர, மேலும் எட்டு டி.எஸ்.பி.,க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.