ADDED : நவ 12, 2024 07:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: கடந்த நவ.,10ம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று (நவ.,12) மேலும் தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த நவ.,10ம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து பணி சென்ற இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சுற்றி வளைத்தனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களது 3 விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், இன்று (நவ.,12) பருத்தித்துறை அருகே மீன் பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.