தமிழக மீனவர்கள் 12 பேர் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்
தமிழக மீனவர்கள் 12 பேர் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்
ADDED : அக் 27, 2024 07:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழக மீனவர்கள் 12 பேரை இன்று(அக்.,27) இலங்கை கடற்படை கைது செய்தது.
தமிழக மீனவர்கள் 12 பேர் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து பணி சென்ற இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சுற்றி வளைத்தனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்கள் 12 பேரை கைது செய்த இலங்கை கடற்படையினர், விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.
தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதால், இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது. அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.