உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : மே 27, 2026 07:13 AM

அ நிறம் | அளவு
சென்னை: நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகை மருந்து, மாத்திரைகள், மத்திய மற்றும் மாநில மருந்து தர கட்டுப்பாட்டு வாரியங்கள் வாயிலாக ஆய்வு செய்யப்படுகின்றன.
கடந்த மாதத்தில் மட்டும், 1,000க்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன.
அவற்றில் உயர் ரத்த அழுத்தம், காய்ச்சல், சளி, கிருமி தொற்று, அஜீரண பிரச்னைகள் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும், 120 மருந்துகள் தரமற்றவையாக இருந்தன. ஒரு மருந்து போலியானதாக இருந்தது கண்டறியப்பட்டது.
அதன் விபரங்கள், மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியத்தின் https://cdsco.gov.in/ இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.
