15 கடலோர மாவட்டங்களுக்கு தலா 12,000 லிட்டர் மண்ணெண்ணெய்
15 கடலோர மாவட்டங்களுக்கு தலா 12,000 லிட்டர் மண்ணெண்ணெய்
ADDED : அக் 16, 2024 02:27 AM
சென்னை:தமிழகத்தில் சமையல் காஸ் சிலிண்டர் இணைப்பு இல்லாத மற்றும் ஒரு சிலிண்டர் இணைப்பு உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு, ரேஷனில் மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது. ஒரு லிட்டர் விலை, 15 ரூபாய். கார்டுதாரர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை மத்திய அரசு நிர்ணயம் செய்கிறது.
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை சீசன் துவங்கியுள்ளது. வரும் ஜனவரி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார் உட்பட, 15 கடலோர மாவட்டங்களுக்கு தலா, 12,000 லிட்டர் மண்ணெண்ணெய்யை, உணவுத்துறை ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த மண்ணெண்ணெய், வடகிழக்கு பருவமழை சீசன் முழுதும் வைத்திருந்து, தேவைப்படும் சமயம் பயன்படுத்தும் வகையில், டீலர் மையங்களில் இருப்பு வைக்கப்படும். பின், ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.