ரயில் பாதைகள் அருகே 12,480 கி.மீ., துாரத்திற்கு சுற்றுச்சுவர் அமைப்பு
ரயில் பாதைகள் அருகே 12,480 கி.மீ., துாரத்திற்கு சுற்றுச்சுவர் அமைப்பு
ADDED : டிச 09, 2025 07:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: ரயில் பாதைகளை, பொது மக்கள், கால்நடைகள் கடந்து செல்வதை தடுக்க, நாடு முழுதும் ரயில்வேயில், 12,480 கி.மீ., துாரம் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளதாக, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது :
நாடு முழுதும், 1.32 லட்சம் கி.மீ., துாரம் ரயில் பாதைகள் உள்ளன. இதில், 1.09 லட்சம் கி.மீ., துாரம் ரயில்கள் இயக்கப்படும் வழித்தடங் களாக உள்ளன. முக்கிய வழித்தடங்களில் ரயில் வேகத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அதற்காக, தண்டவாளத்தை பயணியர், கால் நடைகள் கடந்து செல்வதை தடுக்கும் வகையில், தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு வருகிறது. நாடு முழுதும் இதுவரை, ரயில் பாதைகளில் யாரும் குறுக்கே செல்ல முடியாதபடி, 12,480 கி.மீ., துாரத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

