ADDED : ஜூன் 05, 2026 03:00 AM

அ நிறம் | அளவு
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நேற்று மாலை நிலவரப்படி, 13 நகரங்களில் வெயில் சதமடித்தது.
அதிகபட்சமாக, சென்னை மீனம்பாக்கம், வேலுாரில், தலா, 104 டிகிரி பாரன்ஹீட், அதாவது 40.4 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. இதற்கு அடுத்தபடியாக, கடலுாரில், 103 டிகிரி பாரன்ஹீட், அதாவது 39.7 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.
சென்னை நுங்கம்பாக்கம், காரைக்கால், மதுரை, நாகப்பட்டினம், பரங்கிப்பேட்டை, புதுச்சேரி, தஞ்சாவூர், திருச்சி, திருத்தணி, தொண்டி ஆகிய இடங்களில், தலா, 38 டிகிரி செல்ஷியஸ்க்கு மேல், வெப்பம் பதிவானது என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
