ADDED : ஆக 23, 2025 09:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழகத்தில், இந்த ஆண்டு ஜூன் வரை, 13,000 கிலோ கஞ்சாவை , போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இதுகுறித்து, இ.பி. சி.ஐ.டி., எனும் அமலாக்க பணியக இயக்குநரக போலீசார் கூறியதாவது:
மாநிலம் முழுதும் ரகசிய கண்காணிப்பு மற்றும் சோதனை வாயிலாக, இந்த ஆண்டில், ஜூன் வரை, 13,000 கிலோ கஞ்சா பறி முதல் செய்யப்பட்டுள்ளது.
இதில், 1,446 கிலோ கஞ்சா இலங்கைக்கும், 578 கிலோ கேரளாவுக்கும் கடத்தப்பட இருந்தவை. போதை மாத்திரைகள் புழக்கம் அதிகரித்துள்ளது. ஜூன் வரை, 95,156 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
'மெத் ஆம்பெட்டமைன், ஆம்பெட்டமைன்' உள்ளிட்ட போதை பொருட்கள், 424 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

