ADDED : ஆக 08, 2025 01:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்தில் மீன்பிடி தடைகாலம் முடிந்து, மீன் பிடிக்க சென்ற 55 நாட்களில், 47 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த ஆண்டில் இதுவரை, 167 பேர் உட்பட, தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், 1,333 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்; 183 படகுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் இருந்தாலும், இலங்கை கடற்படையால், ஆண்டு முழுதுமே மீனவர்களுக்கு மீன்பிடி தடை காலம் தொடரும் கொடுமை அரங்கேறுகிறது.
இவற்றை தவிர்க்க, கச்சத்தீவை மீட்பது தான் தீர்வு. அதை மீட்பது எப்போது; இக்கொடுமையை தடுத்து நிறுத்துவது எப்போது?
- சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி