ADDED : ஜன 28, 2025 06:15 AM

சென்னை : சென்னை உட்பட, 14 மாவட்டங்களுக்கு பா.ஜ., மாவட்ட தலைவர்களை, அக்கட்சியின் மாநில தேர்தல் அதிகாரி சக்கரவர்த்தி அறிவித்து உள்ளார்.
அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பா.ஜ., அமைப்பு தேர்தலில் மூன்றாம் கட்டமாக, சஞ்சீவி -- தென்சென்னை, குமார் -- சென்னை கிழக்கு, கிரி - - மத்திய சென்னை கிழக்கு, லதா -- மத்திய சென்னை மேற்கு, பாஸ்கர் -- சென்னை மேற்கு, நாகராஜ் -- வடசென்னை கிழக்கு, பாலாஜி -- வடசென்னை மேற்கு, அஸ்வின்குமார் -- திருவள்ளூர் மேற்கு, விநாயகம் - - விழுப்புரம் வடக்கு.
ரமேஷ் -- திருவண்ணாமலை தெற்கு, ஜெய்சதீஷ் -- தஞ்சை தெற்கு, மாரிமுத்து -- கோவை வடக்கு, மாரி சக்கரவர்த்தி - மதுரை நகர், முரளிதரன் -- ராமநாதபுரம் ஆகியோர், மாவட்ட தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 19ம் தேதி 33 மாவட்ட தலைவர்களும், அதைத் தொடர்ந்து, 16 மாவட்ட தலைவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மூன்றாம் கட்டமாக நேற்று, 14 மாவட்ட தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

