உலமாக்கள் வாரியத்திற்கு உறுப்பினர்கள் 15 பேர் நியமனம்
உலமாக்கள் வாரியத்திற்கு உறுப்பினர்கள் 15 பேர் நியமனம்
ADDED : பிப் 21, 2024 03:28 AM
சென்னை : உலமாக்கள் மற்றும் பணியாளர் நல வாரியத்திற்கு, அலுவல் சார்ந்த மற்றும் அலுவல் சாரா உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுஉள்ளனர்.
உலமாக்கள் மற்றும் பணியாளர்களின் நலனுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களின் அமலாக்கத்தை கண்காணிக்கவும், புதிய திட்டங்களை அமல்படுத்துவது குறித்து அரசுக்கு ஆலோசனைகள் வழங்கவும், இவ்வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தலைவராக இருப்பார்.
உறுப்பினராக, 10 அலுவல் சார்ந்தவர்கள், 16 அலுவல் சாராதவர்கள் இருப்பர். இவர்கள் பதவி காலம் மூன்று ஆண்டுகள். தற்போது வாரிய தலைவராக, அமைச்சர் மஸ்தான் நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர் வாரிய உறுப்பினர் செயலராக செயல்படுவார். பல்வேறு துறை செயலர்கள், அலுவல் சார் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அலுவல் சாரா உறுப்பினர்களாக, 15 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதற்கான அரசாணையை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலர் ரீட்டா ஹரீஸ் தக்கர் வெளியிட்டுள்ளார்.

