உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஜூலை 29, 2026 11:06 PM
அ நிறம் | அளவு
சென்னை: தமிழகம் முழுதும், போலீசார் நடத்திய சோதனையில், 15,000 கஞ்சா சாக்லேட்டுகள் உள்ளிட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக, 255 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் போதைப் பொருட்களை ஒழிக்க, இம்மாதம் 8ம் தேதியில் இருந்து, ஆக., 8ம் தேதி வரை அதிரடி சோதனைகளை, போலீசார் மேற்கொண்டுள்ளனர்.
கடந்த, 20ம் தேதியில் இருந்து, 25ம் தேதி வரை, போலீசார் நடத்திய சோதனையில், 15,000 கஞ்சா சாக்லேட், 517 கிலோ கஞ்சா, 146 கிராம் மெத் ஆம்பெட்டமைன், 1.45 கிராம் ஹெராயினை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக, 200 வழக்குகள் பதிவு செய்து, 255 பேரை கைது செய்துள்ளனர்.
அதேபோல், 486 வழக்குகள் பதிவு செய்து, 5,237 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
