கடலூரில் அரசு மருத்துவர் வீட்டில் 158 சவரன் நகை கொள்ளை
கடலூரில் அரசு மருத்துவர் வீட்டில் 158 சவரன் நகை கொள்ளை
ADDED : ஜூலை 25, 2025 01:14 PM

கடலூர்: கடலூர் அருகே அரசு மருத்துவர் வீட்டில் 158 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருபவர் ராஜா. இவர், கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள புது பிள்ளையார் குப்பம் பகுதியில் வசித்து வருகிறார். இவரது மனைவி ஆர்த்தியும் மருத்துவராக பணியாற்றி வருகிறார். மருத்துவர் ராஜா நேற்று வீட்டை பூட்டி விட்டு, வழக்கம் போல பணிக்கு சென்றுள்ளார்.
பணி முடிந்து திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 158 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது.
பின்னர், இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

