sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அதிகாரிகள் பெயரில் மோசடி முயற்சி 11 மாதத்தில் 170 புகார்கள் பதிவு

/

அதிகாரிகள் பெயரில் மோசடி முயற்சி 11 மாதத்தில் 170 புகார்கள் பதிவு

அதிகாரிகள் பெயரில் மோசடி முயற்சி 11 மாதத்தில் 170 புகார்கள் பதிவு

அதிகாரிகள் பெயரில் மோசடி முயற்சி 11 மாதத்தில் 170 புகார்கள் பதிவு


ADDED : டிச 03, 2024 11:57 PM

Google News

ADDED : டிச 03, 2024 11:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தலைமை செயல் அதிகாரிகள் மற்றும் உரிமையாளர்கள் போல நடித்து, பணம் பறிக்க முயற்சி நடப்பதாக, 170 புகார்கள் பதிவாகி உள்ளன. மோசடி நபர்களிடம், பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என, சைபர் குற்றத்தடுப்பு பிரிவு தலைமையகம் எச்சரித்துள்ளது.

அதன் அறிக்கை:

பெரிய நிறுவனங்கள், வணிகம் மற்றும் நிதி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள், நிர்வாக இயக்குநர்கள் மற்றும் உரிமையாளர்கள் போல, 'வாட்ஸாப்பில்' சுய விபரம் பதிவு செய்து, அவர்களின் கணக்காளர்களிடம், 'ஆன்லைன்' வழியாக, பண மோசடி செய்ய சைபர் குற்றவாளிகள் முயற்சித்து வருகின்றனர்.

இத்தகையை மோசடி குறித்து, தமிழகத்தில் கடந்த ஜனவரி முதல் நவம்பர் வரை, www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில், 170 புகார்கள் பதிவாகி உள்ளன. எனவே, பொதுமக்கள் கவனமாக இருக்கவும்.

'ஹேக்கத்தான் - 2024' போட்டி

சைபர் குற்றங்களை தடுப்பது தொடர்பாக, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, சைபர் குற்றப்பிரிவு தலைமையகம், 'தமிழ்நாடு காவல் துறை ேஹக்கத்தான் -2024' என்ற போட்டியை அறிவித்துள்ளது. இப்போட்டி, பிப்., 5ல், சென்னை பூந்தமல்லியில் உள்ள பனிமலர் பொறியியல் கல்லுாரியில் நடக்க உள்ளது.

பல்வேறு தலைப்புகளின் கீழ், போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பம் மற்றும் விபரங்கள், https://bit.ly/TNPOLICEHACKATHON2024:https://bit.ly/TNCCWPolice Hackathon-2024 இணையதளத்தில் உள்ளன.

போட்டியில், தொழில் நுட்ப வல்லுநர்கள், கல்லுாரி மாணவர்கள் பங்கேற்கலாம். முதல் மூன்று இடங்களை பெறுவோருக்கு, முறையே, 1 லட்சம், 75,000, 50,000 ரூபாய் பரிசு வழங்கப்படும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us