sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விதிமீறலில் ஈடுபட்ட 1.82 லட்சம் ஓட்டுனர் உரிமங்கள் ரத்து?

/

விதிமீறலில் ஈடுபட்ட 1.82 லட்சம் ஓட்டுனர் உரிமங்கள் ரத்து?

விதிமீறலில் ஈடுபட்ட 1.82 லட்சம் ஓட்டுனர் உரிமங்கள் ரத்து?

விதிமீறலில் ஈடுபட்ட 1.82 லட்சம் ஓட்டுனர் உரிமங்கள் ரத்து?

14


UPDATED : செப் 30, 2024 11:56 AM

ADDED : செப் 30, 2024 06:11 AM

Google News

UPDATED : செப் 30, 2024 11:56 AM ADDED : செப் 30, 2024 06:11 AM

14


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டது தொடர்பாக, 1 லட்சத்து, 82,375 பேரின் ஓட்டுனர் உரிமங்களை ரத்து செய்ய, பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக டி.ஜி.பி., சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில், கடந்தாண்டு ஜூலை வரை, 10,589 சாலை விபத்துகள் நடந்து, 11,106 பேர் உயிரிழந்தனர். நடப்பு ஆண்டில் இதுவரை, 10,066 சாலை விபத்துகள் நடந்து, 10,536 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டைவிட, 5 சதவீதம் அதாவது, 570 உயிரிழப்புகள் குறைந்து உள்ளன.

நடப்பாண்டு ஜூலை வரை, அதிவேகம், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் என ஆறு வகையான விதிமீறல் தொடர்பாக, 6 லட்சத்து, 66,721 வழக்குகள் பதிவாகி உள்ளன. ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டியது தொடர்பாக, 39 லட்சத்து, 18,197 வழக்குகள் பதிவாகி உள்ளன.

போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டது தொடர்பாக, 1 லட்சத்து, 82,375 பேரின் ஓட்டுனர் உரிமங்களை ரத்து செய்ய, வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், 39,924 ஓட்டுனர் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us