இலங்கைக்கு கடத்திய 188 கிலோ கஞ்சா, பைபர் படகு பறிமுதல்
இலங்கைக்கு கடத்திய 188 கிலோ கஞ்சா, பைபர் படகு பறிமுதல்
ADDED : டிச 05, 2024 04:50 AM

ராமநாதபுரம்: தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட கேரளா கஞ்சா 188 கிலோவையும் பைபர் படகினையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
இந்தியப் பகுதியிலிருந்து இலங்கைக்கு அடிக்கடி போதை பொருட்கள் கடத்தப்படுகிறது.
இதை தடுக்க இந்திய, இலங்கை கடற்படையினர் ரோந்து சென்று வருகின்றனர். இவர்களை ஏமாற்றி கடத்தல் காரர்கள் போதைப்பொருள்களை கடத்துவது வாடிக்கையாக உள்ளது. இலங்கை கடற்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி யாழ்ப்பாணம் குருநகர் கடற்கரைப் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஏழு டிராவல் பேக்குகளில் 188 கிலோ கஞ்சா இருப்பதை பறிமுதல் செய்தனர். கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய பைபர் படகினையும் பறிமுதல் செய்து யாழ்ப்பாணம் ஊர்காவல்துறை போலீசில் ஒப்படைத்தனர். கஞ்சா கடத்தி வந்தவர்கள் குறித்து விசாரிக்கின்றனர். 188 கிலோ கஞ்சாவின் சர்வதேச மதிப்பு 75 லட்சம் ரூபாய் என இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.