தென்மேற்கு பருவமழை 'ஜோர்' அணைகளில் 191 டி.எம்.சி., நீர்
தென்மேற்கு பருவமழை 'ஜோர்' அணைகளில் 191 டி.எம்.சி., நீர்
ADDED : ஆக 05, 2025 11:21 PM
சென்னை:தென்மேற்கு பருவமழை கைகொடுத்ததால், தமிழக அணைகளில் நீர் கையிருப்பு, 191 டி.எம்.சி.,யாக உயர்ந்துள்ளது.
தமிழக நீர்வளத்துறை பராமரிப்பில், 90 அணைகள் உள்ளன. இவற்றில் மேட்டூர், பவானிசாகர், முல்லை பெரியாறு, பரம்பிக்குளம் உள்ளிட்ட 15 அணைகள் மட்டும், 198 டி.எம்.சி., கொள்ளளவு உடையவை.
இவற்றின் வாயிலாக, பாசனம், குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன. மற்ற அணைகள் ஒரு டி.எம்.சி.,க்கும் குறைவான கொள்ளளவு கொண்டவை.
பல அணைகள், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ளதால், அவற்றுக்கு தென்மேற்கு பருவமழை காலங்களில் நீர் வரத்து கிடைக்கிறது. நடப்பாண்டு, தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்கியது.
கர்நாடகா, கேரளா மாநிலங்களில் இயல்பை விட அதிக அளவில் மழை பெய்து வருகிறது.
இதனால், அங்கிருந்தும் தமிழக அணை களுக்கு அதிக நீர்வரத்து கிடைத்து வருகிறது.
இதன் காரண மாக, 90 அணைகளின் நீர் கையிருப்பு 191 டி.எம்.சி.,யாக அதிகரித்துள்ளது. அணைகளின் மொத்த கொள்ளளவில், இது 85.2 சதவீதம்.
அதிகபட்சமாக சேலம் மேட்டூர் அணையில், 92.5 டி.எம்.சி.,; ஈரோடு பவானிசாகரில் 30 டி.எம்.சி.,; கோவை பரம்பிக்குளத்தில் 13.3 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது.