ADDED : மார் 06, 2024 11:58 PM
சென்னை:நகர்ப்புற உள்ளாட்சிகளில், அடிப்படை வசதிகளை ஏற்படுத்த, 'அம்ருத் 2.0' திட்டத்தின் கீழ், 215 திட்டங்களை செயல்படுத்த, 1,996.50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், 23.59 கோடி ரூபாயில், புதுக்கோட்டை நகராட்சியில், 24 மணி நேரம் குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
பொது மற்றும் தனியார் பங்களிப்பின் கீழ், சென்னை மாநகராட்சி, 10 மற்றும் 13வது மண்டலத்தில், 24 மணி நேரம் குடிநீர் வழங்க 760 கோடி; கோவை மாநகராட்சியில் கழிவுநீரை சுத்திகரித்து, தொழிற்சாலைகளுக்கு மறு பயன்பாட்டு நீர் வழங்க, 245 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மதுரையில் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டுகளில், 24 மணி நேரம் குடிநீர் வழங்க, 150 கோடி; சேலம் மாநகராட்சியில் 24 மணி நேரம் குடிநீர் வழங்க, 758.13 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கான அரசாணையை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

