ADDED : அக் 11, 2011 11:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: வக்கீலை தாக்கிய போலீசாரை கைது செய்ய வலியுறுத்தி, கோவையில் 2வது நாளாக எஸ்.பி., அலுவலகத்தை வக்கீல்கள் முற்றுகையிட்டு வருகின்றனர்.
கோவை துடியலூர் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்ற ஆனந்தீஸ்வரன் என்ற வக்கீலை அங்கிருந்த போலீசார் தாக்கியதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தாக்கிய போலீசாரை கைது செய்ய வலியுறுத்தியும் 2வது நாளாக இன்றும் 300க்கும் மேற்பட்ட வக்கீல்கள் எஸ்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

