ADDED : ஜூன் 24, 2025 06:30 AM
திருவாரூர்: திருவாரூரில், டூ - வீலர் மீது டிப்பர் லாரி மோதியதில், கல்லுாரி மாணவர்கள் இருவர் பரிதாபமாக இறந்தனர்.
திருவாரூர் அருகே விளமலைச் சேர்ந்த ராஜ்குமார் மகன் நவீன்ராஜ், 17. இவரும், அதே ஊரை சேர்ந்த லோகநாதன் மகன் பிரகாஷ்ராஜ், 17, என்பவரும் நண்பர்கள். நாகப்பட்டினத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் இருவரும் பட்டப்படிப்பு படிப்பதற்காக சேர்ந்துள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு டூ - வீலரில், பிரகாஷ்ராஜை நவீன்ராஜ் அழைத்துக்கொண்டு, விளமலில் இருந்து திருவாரூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
நாகை பைபாஸ் சாலையில் வந்தபோது, எதிரே வந்த டிப்பர் லாரி மோதியதில், டூ - வீலரில் பின்னால் உட்கார்ந்து வந்த பிரகாஷ்ராஜ், அதே இடத்தில் இறந்தார்.
படுகாயமடைந்த நவீன்ராஜ், திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். திருவாரூர் டவுன் போலீசார் வழக்குபதிந்து, டிப்பர் லாரி டிரைவர் கரூர் ராஜேந்திரன், 48, என்பவரை கைது செய்தனர்.

