உள்ளடக்கத்திற்கு செல்ல
வீட்டில் பதுக்கிய 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது
வீட்டில் பதுக்கிய 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது
ADDED : நவ 08, 2026 06:03 PM
அ நிறம் | அளவு
செய்யாறு: செய்யாறு அருகே, விற்பனைக்கு பொட்டலங்களாக பதுக்கி வைத்திருந்த, 2 கிலோ கஞ்சா, 93 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, இருவரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு டவுன் பகுதியில், செய்யாறு போலீசார் இன்று (நவ.,8) சோதனையில் ஈடுபட்டபோது, கோபி, 46, என்பவரது பெட்டி கடையில், 98 கிலோ குட்கா பொருட்கள் மற்றும், கன்னியம் தெருவை சேர்ந்த சுனில், 32, என்பவரது வீட்டில் பொட்டலங்களாக, 2 கிலோ கஞ்சா விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். கோபி, சுனில் ஆகிய இருவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
