நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பெய்த கன மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், அம்மாவட்டங்களில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்ததால், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
அம்மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா, 2,000 ரூபாய் நிவாரண தொகையை அரசு அறிவித்துள்ளது. இதை உயர்த்தி வழங்குமாறு மக்களும், எதிர்க்கட்சிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றன.
எனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு இம்மாதமும், அடுத்த மாதமும் ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்க, அரசு முடிவு செய்துள்ளது.