தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/சங்ககிரி தொகுதியில் 2 ஓட்டுச்சாவடி உதயம்

சங்ககிரி தொகுதியில் 2 ஓட்டுச்சாவடி உதயம்

சங்ககிரி தொகுதியில் 2 ஓட்டுச்சாவடி உதயம்


UPDATED : அக் 25, 2026 06:27 AM

ADDED : அக் 25, 2026 06:00 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 25, 2026 06:27 AM ADDED : அக் 25, 2026 06:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்,:சேலம் மாவட்டத்தில், 2027ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம், நவ., 12ல் வெளியிடப்பட உள்ளது. அதுதொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

கலெக்டர் இளம் பகவத் தலைமை வகித்து பேசியதாவது:

மாவட்டத்தில் வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல், திருத்தம், மறுசீரமைத்தல் பணி, நவ., 2க்குள் முடிக்கப்படும். பின், 12ல், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, டிச., 12 வரை, ஏற்புரை, மறுப்புரை ஏற்கப்பட்டு, அப்பணியை 28ல் முடித்து, 2027, ஜன., 4ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

அதற்கு முன்னேற்

பாடாக, 1,200 வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுச்சாவடி வீதம் சீரமைத்தல், இடமாற்றம், பெயர் மாற்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி, சங்ககிரி தொகுதியில், 2 ஓட்டுச்சாவடிகள், 147, 321 ஆகிய எண்களில் புதிதாக உருவாக்கியும், தவிர, ஆத்துார், சங்ககிரி, தெற்கு தொகுதிகளில், 128 ஓட்டுச்சாவடிகள் இடமாற்றம் செய்யப்பட உள்ளன.

ஏற்கனவே மாவட்டத்தில், 3,468 ஓட்டுச்

சாவடிகள் உள்ள நிலையில், புதிதாக இரு ஓட்டுச்சாவடிகளை சேர்த்து, 3,470 ஆக அதிகரிக்க உள்ளது. அதற்கான ஒப்புதல் பெற, இந்திய தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்படும்.

அதனால், 11 தொகுதி

களிலும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணிக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பல கட்சிகள் புறக்கணிப்பு

இந்த கூட்டத்தை, தி.மு.க., தே.மு.தி.க., வி.சி.க., சி.பி.ஐ., சி.பி.எம்., கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். பின் கலெக்டர் அலுவலக நுழைவாயிலில், தலைமை தேர்தல் கமிஷனர் பதவி விலகக்கோரி, கோஷம் எழுப்பினர்.

இதையடுத்து, சி.பி.ஐ., மாவட்ட செயலர் மோகன் கூறுகையில், ''நாடு முழுதும், 13.20 கோடி வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்கிய தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும். சேலத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிய, 1.24 லட்சம் பேரை, மீண்டும் இணைக்க வேண்டும்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us