தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ ஒரு மாணவிக்கு 2 ஆசிரியர்கள்!

ஒரு மாணவிக்கு 2 ஆசிரியர்கள்!

ஒரு மாணவிக்கு 2 ஆசிரியர்கள்!

4


ADDED : ஜூலை 02, 2026 08:03 AM

Follow on GoogleFavourite on Google

4

ADDED : ஜூலை 02, 2026 08:03 AM


4
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நமது நிருபர்

துாத்துக்குடி மாவட்டம், புதுப்பட்டியில், டி.என்.டி.டி.ஏ., என்ற பெயரில் அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஒரே ஒரு மாணவிக்கு, தலைமை ஆசிரியை மேரி, ஆசிரியர் ஜீவா என இருவர் பணியில் உள்ளனர். ஆனால், இருவரும் மாணவிக்கு பாடம் நடத்துவதில்லை என, கிராம மக்கள் குற்றஞ்சாட்டினர்.

இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:

* தலைமை ஆசிரியை மேரிக்கு, 1.30 லட்சம், ஜீவாவிற்கு, 80,000 ரூபாய், பள்ளி சமையல் உதவியாளருக்கு, 7,000 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.

* ஆனால், கரும்பலகையில் உள்ள தேதியை மாற்றக் கூட அவர்களுக்கு நேரமில்லை.

* கடந்தாண்டு பள்ளியில், ஐந்து மாணவர்கள் படித்த நிலையில், தற்போது ஒரு மாணவி மட்டுமே படிக்கிறார்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us