ADDED : ஆக 05, 2025 05:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்தலக்குண்டு: கோவில் அன்னதானத்திற்கு சமைக்கப்பட்ட ரசம் பாத்திரத்தில் குழந்தை விழுந்து இறந்தது.
திண்டுக்கல் மாவட்டம், -எழுவனம்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது வீட்டின் அருகில் உள்ள குலதெய்வம் கோவிலில், அன்னதானத்திற்காக ரசம் சமைக்கப்பட்டது. அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிவக்குமாரின் 2 வயது மகன் ஸ்ரீதரன், கொதித்துக் கொண்டிருந்த ரசப் பாத்திரத்தில் தவறி விழுந்தார்.
அருகில் இருந்தவர்கள் குழந்தையை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தை இறந்தது. வத்தலக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.

