தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/பிரதமர் மோடி உருவ பொம்மை எரித்த 20 பேர் கைது

பிரதமர் மோடி உருவ பொம்மை எரித்த 20 பேர் கைது

பிரதமர் மோடி உருவ பொம்மை எரித்த 20 பேர் கைது


UPDATED : அக் 11, 2026 01:33 AM

ADDED : அக் 11, 2026 01:29 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 11, 2026 01:33 AM ADDED : அக் 11, 2026 01:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருச்சி: தலைமை தேர்தல் ஆணையர் ஞனேஷ்குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, பிரதமர் மோடி உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

‘வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தால் ஏற்பட்ட குளறுபடிக்கு, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தான் காரணம்‘ என, அவருடன் இருந்த இரண்டு தேர்தல் ஆணையர்கள் தெரிவித்தனர்.

இதனால், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, இரண்டு நாட்களுக்கு முன், பார்லிமென்ட் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் போராட்டத்தில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்டார். தற்போது, டில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட, சி.ஜே.பி., அமைப்பினரையும் கைது செய்துள்ளனர்.

அதே போல், நாடு முழுதும் காங்கிரஸ் உட்பட பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும், திருச்சியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலர் சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலர் ராஜா, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி மாவட்ட செயலர் தேசிகன் ஆகியோர் தலைமையில், திருச்சி, தெப்பக்குளம் தபால் நிலைய முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிரதமர் உருவ பொம்மைகளை எரித்தனர். இதனால், போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உருவப்பொம்மை மற்றும் படத்தை எரித்த 20 பேரை, கோட்டை போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us