தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/பாம்பு கடித்து வியாபாரி பலி செவிலியர்களுக்கு ‘நோட்டீஸ்’

பாம்பு கடித்து வியாபாரி பலி செவிலியர்களுக்கு ‘நோட்டீஸ்’

பாம்பு கடித்து வியாபாரி பலி செவிலியர்களுக்கு ‘நோட்டீஸ்’

2


UPDATED : அக் 11, 2026 02:11 AM

ADDED : அக் 11, 2026 01:29 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 11, 2026 02:11 AM ADDED : அக் 11, 2026 01:29 AM

2


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தென்காசி: கடையநல்லுாரில், உரிய சிகிச்சை கிடைக்காமல் வியாபாரி சுடர்மணி, 66, இறந்ததால், ஜி.ஹெச்., செவிலியர்கள் இருவருக்கு ‘நோட்டீஸ்’ அனுப்பப்பட்டது.

தென்காசி மாவட்டம், கடையநல்லுார் முத்துக்கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சுடர்மணி. முறுக்கு வியாபாரியான இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டில் சாக்குப்பையை அகற்றியபோது கண்ணாடி விரியன் பாம்பு கடித்தது.

அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர், உரிய சிகிச்சை கிடைக்காமல் இறந்ததாக, உறவினர்கள் குற்றஞ்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் பிரேமலதா விசாரணை நடத்தினார். நோயாளி குறித்து முறையாக மருத்துவருக்கு தகவல் தெரிவிக்காத, இரு செவிலியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் கூறினார். கடையநல்லுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us