ADDED : அக் 22, 2024 10:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:கூட்டுறவு சங்கங்கள் சார்பில், ரேஷன் கடை, பல்பொருள் அங்காடி, மருந்தகம் போன்றவை நடத்தப்படுகின்றன. அவற்றில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு, 20 சதவீதம் போனஸ் வழங்க, கூட்டுறவுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
லாபம் ஈட்டும் சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும்.
போனஸ் சட்டத்தின் கீழ் வராத, லாபம் ஈட்டாத தலைமை சங்கங்கள், மத்திய சங்கங்களில் பணிபுரியும் ஊழியர் களுக்கு, 3,000 ரூபாயும்; தொடக்க சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, 2,400 ரூபாயும் கருணைத்தொகையாக வழங்கவும் ஆணையிடப்பட்டு உள்ளது.
இதன் வாயிலாக, 43,683 ஊழியர்களுக்கு, 44.42 கோடி ரூபாய் போனஸ் வழங்கப்பட உள்ளது.