ADDED : பிப் 20, 2024 01:19 AM
கொரோனா பெருந்தொற்றுக்கு பின், தெருநாய்கள் இனப்பெருக்க தடை சிகிச்சை திட்டங்களை நடைமுறைப்படுத்த இயலாமல் போனது. இதனால், தெருநாய்களின் எண்ணிக்கை உயர்ந்து, பொதுமக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. எனவே, விலங்குகள் இனப்பெருக்க தடை திட்டத்தை முறையாக செயல்படுத்த, 20 கோடி ரூபாய் கால்நடை பராமரிப்பு துறைக்கு ஒதுக்கப்படும்
தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்திற்கு, 11 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்
கன்னியாகுமரி, நாகை, ராமநாதபுரம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவள்ளூர், துாத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் துாண்டில் வளைவு, மீன் இறங்கு தளம், துார்வாருதல், செயற்கை மீன் உறைவிடங்கள் போன்ற கரையோர பாதுகாப்பு மற்றும் கட்டுமான பணிகள், 450 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படும்
திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட ஆவின் தொழிற்சாலைகளில் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய தானியங்கி இயந்திரங்களை பொருத்தி, 60 கோடி ரூபாய் மதிப்பில் நவீனமயமாக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்
பால் தரத்தை உறுதி செய்ய, 21 கோடி ரூபாய் மதிப்பில் நவீன கருவிகள் பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்கும், ஒன்றியங்களுக்கும்வழங்கப்படும்.

