தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/'டான்டீ' தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ்

'டான்டீ' தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ்

'டான்டீ' தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ்


UPDATED : நவ 05, 2026 11:51 PM

ADDED : நவ 04, 2026 06:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 05, 2026 11:51 PM ADDED : நவ 04, 2026 06:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வால்பாறை: தமிழகத்தில், 'டான்டீ' தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு இந்த ஆண்டு, 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்ற அரசின் அறிவிப்பால், தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை சின்கோனா, நீலகிரி மாவட்டம் குன்னுார், கூடலுார், கோத்தகிரி, சேரம்பாடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில், தமிழக அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகம் (டான்டீ) செயல்படுகிறது.

இந்த ஆண்டு டான்டீ தொழிலாளர்களுக்கு, 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என, தமிழக அரசு நேற்று அறிவித்தது. இதனால், தமிழகத்தில் பணிபுரியும் டான்டீ தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கோத்தகிரி சோசலிச தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் வெற்றிவேல் கூறியதாவது:

தமிழகத்தில் பணிபுரியும் டான்டீ தொழிலாளர்களுக்கு, 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என, வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்த திட்டமிட்டிருந்தோம்.

எங்கள் கோரிக்கையை ஏற்று, டான்டீ தொழிலாளர்களுக்கு, 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என, அறிவித்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

இவ்வாறு, அவர் கூறினார்.

குன்னுார் டான்டீ நிர்வாக அலுவலர் சீத்தாலட்சுமியிடம் கேட்டபோது, ''டான்டீ தேயிலை தோட்டங்களில் தற்போது, 3,451 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு இந்த ஆண்டு, 20 சதவீதம் போனஸ் வழங்கப்படவுள்ளது. 5ம் தேதி (இன்று) முதல், தொழிலாளர்களின் வங்கி கணக்கில் போனஸ் தொகை வரவு வைக்கப்படும்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us