தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/2 ஆயிரம் ஆண்டு பழமையான செங்கல் கட்டுமானங்கள், உறைகிணறுகள் கண்டுபிடிப்பு

2 ஆயிரம் ஆண்டு பழமையான செங்கல் கட்டுமானங்கள், உறைகிணறுகள் கண்டுபிடிப்பு

2 ஆயிரம் ஆண்டு பழமையான செங்கல் கட்டுமானங்கள், உறைகிணறுகள் கண்டுபிடிப்பு


ADDED : அக் 03, 2026 04:17 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 03, 2026 04:17 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருநெல்வேலி: திருநெல்வேலி குப்பக்குறிச்சியில் கீழடி செங்கற்களை விட பெரியதும், 2,000 ஆண்டு பழமையானதுமான செங்கல் கட்டுமானங்கள், உறைகிணறுகள் உள்ளிட்ட தொல்லியல் எச்சங்களை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை மாணவர்கள் கண்டுபிடித்தனர்.

சீவலப்பேரி அருகே சிற்றாறு, தாமிரபரணி ஆற்றுடன் இணையும் பகுதியில் குப்பக்குறிச்சி கிராமம் அமைந்துள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த காலபெருமாள், பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு முதுகலை தொல்லியல் படித்து வருகிறார்.

இவர் முண்டன் கோயில் அருகே பழங்கால மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்களைக் கண்டறிந்தார். இதையடுத்து தொல்லியல் துறைத் தலைவர் பொறுப்பு பேராசிரியர் சி. சுதாகர் தலைமையில் பேராசிரியர்கள், மாணவர்கள் அங்கு மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது 2 அடி விட்டமுள்ள உரைகிணறுகள், பாசி மணிகள், வட்டச்சில்லுகள், சுடுமண் காதணிகள், பூ வேலைப்பாடுகள் கொண்ட வெள்ளை நிற பானைகள், சுடுமண் தக்களிகள் மற்றும் பழங்கால செங்கல் கட்டுமானங்கள் கண்டறியப்பட்டன. இந்தக் கட்டுமானங்களில் பயன்படுத்தப்பட்ட செங்கற்கள் 30 செ.மீ., அகலம், 9 செ.மீ., உயரம், 39 செ.மீ.,க்கும் அதிகமான நீளம் கொண்டவையாக உள்ளன. கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட செங்கற்கள் 24 செ.மீ., அகலம், 6 செ.மீ., தடிமன், 36 செ.மீ., நீளம் கொண்டவை. இதனால் குப்பக்குறிச்சி செங்கற்கள் அளவில் பெரியவையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்ற செங்கல் கட்டுமானங்கள் குப்பக்குறிச்சிக்கு தெற்கே உள்ள மடத்துப்பட்டி கிராமம் முண்டன் கோயில் அருகேயும் கண்டறியப்பட்டுள்ளன. இப்பகுதியில் நுாற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பில் காணப்பட்ட பழங்காலக் கட்டுமானங்கள், செங்கல் உற்பத்திக்காக மண் எடுக்கப்பட்டதால் பெருமளவில் அழிந்துவிட்டன. தற்போது எஞ்சியுள்ள பகுதிகளும் அழியும் நிலையில் உள்ளன.

இப்பகுதியிலிருந்து தாமிரபரணி ஆற்றின் கரையோரமாக சுமார் 20 கி.மீ., தொலைவில்தான் ஆதிச்சநல்லூர் அமைந்துள்ளது. அங்கு வாழ்ந்த மக்களின் வாழ்விடப் பகுதி இதுவரை கண்டறியப்படாத நிலையில், குப்பக்குறிச்சி கண்டுபிடிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

தொல்லியல் பேராசிரியர்கள் முருகன், மதிவாணன் ஆகியோர் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை ஆய்வு செய்தனர். இவை ச?1,000 முதல் 2,000 ஆண்டுகள் பழமையானவையாக இருக்கலாம் என்றும், இப்பகுதியில் பழங்கால மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

பழங்காலச் செங்கற்களின் காலத்தைத் துல்லியமாகக் கண்டறிய அவற்றை ஆய்வுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக துறைத் தலைவர் சி. சுதாகர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us