தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/சபரிமலை பக்தர்களுக்காக 204 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

சபரிமலை பக்தர்களுக்காக 204 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

சபரிமலை பக்தர்களுக்காக 204 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு


UPDATED : நவ 24, 2026 08:46 PM

ADDED : நவ 24, 2026 08:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 24, 2026 08:46 PM ADDED : நவ 24, 2026 08:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

–- நமது நிருபர் -–: சபரிமலை செல்லும் பக்தர்களுக்காக, இதுவரை, 204 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு உள்ளதாக, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை:

கடந்த, 16ம் தேதி முதல் சபரிமலை சீசன் தொடங்கியுள்ள நிலையில், தற்போது வரை சென்னை –- கொல்லம், திருவனந்தபுரம் –- மங்களூரு, பன்வெல் –- கோட்டயம், விசாகப்பட்டினம் –- கொல்லம், ஐதராபாத் – கொல்லம் மற்றும் விஜயவாடா –- கோட்டயம் ஆகிய வழித்தடங்களில் மொத்தம், 204 சிறப்பு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளன. தேவைக்கேற்ப கூடுதல் ரயில்கள் இயக்கப்படும்.

முக்கிய வழித்தட ரயில் நிலையமான கோட்டயத்தில், ஒரே நேரத்தில், 900 பக்தர்கள் தங்கும் வகையில், மூன்று மாடி வசதி மையம், 20 கழிப்பறை, ஓய்வறைகள் மற்றும் சிறப்பு பஸ் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. செங்கன்னுாரில், 600 பக்தர்கள் தங்கும் வகையில், மூன்று விசாலமான கூடாரங்களும், ஏ.சி., காத்திருப்பு அறையும், எர்ணாகுளம் ஜங்ஷனில் நடமாடும் கழிப்பறை மற்றும் ஓய்வறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

கோட்டயம் மற்றும் செங்கன்னுார் ரயில் நிலையங்களில், 24 மணி நேரமும் செயல்படும் கூடுதல் முன்பதிவில்லா டிக்கெட் கவுன்ட்டர்கள் மற்றும் ஆர்.பி.எப்., உதவி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. பிற மாநில பக்தர்களுக்கு உதவ தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் தெரிந்த ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us