ADDED : டிச 23, 2025 07:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: நாட்டில் விற்கப்படும் அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளையும், மத்திய - மாநில மருந்து தர கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆய்வு செய்கின்றன. அதன்படி, போலி மருந்துகள் கண்டறியப்பட்டு, அவை சந்தையில் இருந்து வெளியேற்றப்படுவதுடன், அந்நிறுவனங்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, நவம்பர் மாதத்தில், 1,000க்கும் அதிகமான மருந்து மாதிரிகள், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில், 205 மருந்துகள் தரமற்றவையாகவும், இரண்டு மருந்துகள் போலியானதாகவும் இருந்தது.
இந்த மருந்துகளின் பெயர், நிறுவன பெயர் மற்றும் மருந்துகளின் தரத்தில் உள்ள குறைபாடு குறித்த விபரங்கள், மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் https://cdsco.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

