sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 2.07 லட்சம் கடலாமை முட்டைகள் சேகரிப்பு: வனத்துறை தகவல்

/

 2.07 லட்சம் கடலாமை முட்டைகள் சேகரிப்பு: வனத்துறை தகவல்

 2.07 லட்சம் கடலாமை முட்டைகள் சேகரிப்பு: வனத்துறை தகவல்

 2.07 லட்சம் கடலாமை முட்டைகள் சேகரிப்பு: வனத்துறை தகவல்


ADDED : மார் 16, 2026 02:38 AM

Google News

ADDED : மார் 16, 2026 02:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'தமிழகத்தில் நடப்பாண்டில், இதுவரை, 2.07 லட்சம் கடலாமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு உள்ளன' என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவர்கள் கூறியதாவது: தமிழகத்தில், திருவள்ளூர் முதல் நாகப்பட்டினம் வரையிலான மாவட்டங்களில், கடலாமைகள் கரைக்கு வந்து முட்டையிடுகின்றன.

கடந்த ஆண்டு அதிக எண்ணிக்கையில், கடலாமைகள் இறந்ததால், தற்போது கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடலோர பகுதிகளில், மீனவர்கள், வன உயிரின ஆர்வலர்கள், வனத்துறையினர் இணைந்து, கடலாமை முட்டைகள் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் நடப்பு ஆண்டில், 51 இடங்களில், கடலாமை முட்டைகள் சேகரிப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. இவற்றில், 2.07 லட்சம் கடலாமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு, 1,788 கூடுகளில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us