நுழைவு தேர்வுகள் விபரம் அறிய மத்திய அரசு செயலி அறிமுகம்
நுழைவு தேர்வுகள் விபரம் அறிய மத்திய அரசு செயலி அறிமுகம்
ADDED : மார் 16, 2026 02:37 AM

சென்னை: நாடு முழுதும், மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி., - என்.ஐ.டி.,களில் சேர, ஜே.இ.இ., நுழைவு தேர்வில் தேர்ச்சி பெறுவது அவ சியம். அதேபோல, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற மருத்துவ படிப்புகளில் சேர, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இதுபோன்ற நுழைவு தேர்வுகள் குறித்து, ஏழை, எளிய மாணவ - மாணவியருக்கு, போதிய விழிப்புணர்வு இல்லை.
இதை கருத்தில் வைத்து, ஏழை மாணவர்கள் நுழைவு தேர்வு குறித்து அறிந்து கொள்ளவும், தயாராகவும், மத்திய அரசு, 'sathee' என்ற புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது.
மத்திய கல்வித்துறை அமைச்சகம், ஐ.ஐ.டி., கான்பூருடன் இணைந்து, மாணவர்களின் கல்வி பயன்பாட்டுக்காக இந்த செயலியை அறிமுகம் செய்துள்ளது.
இதன் வழியே ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வு எனும் 'ஜே.இ.இ.,' 'நீட்' 'க்யூட்' நுழைவுத் தேர்வுகள் தொடர்பான விபரங்களை, மாணவர்கள் அறிந்து கொள்ள நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

