UPDATED : ஏப் 02, 2025 03:03 AM
ADDED : ஏப் 02, 2025 02:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சட்டசபையில் நடந்த விவாதம்:
மாநிலம் முழுதும் 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் இம்மாதம் திறக்கப்பட
உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
தி.மு.க., தாயகம் கவி: தமிழகம்
முழுதும் 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கப்படும் எனஅறிவிக்கப்பட்டு
இருந்தது. அதில் எத்தனை பயன்பாட்டிற்குவந்துள்ளன.
அமைச்சர்
சுப்பிரமணியன்: 2022 மே மாதம் 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள்
அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். அதில் ஒரே ஆண்டில் பணிகள்
முடிக்கப்பட்டு 2023ல் 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள்
திறக்கப்பட்டன.மீதமுள்ள 208 மையங்கள் கட்டப்பட்டுவருகின்றன.
இம்மாதம் திறந்து வைக்கப்படஉள்ளன.
இவ்வாறு விவாதம் நடந்தது.