ADDED : மார் 18, 2024 01:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம் 540 விசைப்படகுகளில் சென்ற மீனவர்கள் வழக்கம் போல் மீன்வளம் நிறைந்த இந்திய, இலங்கை எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் துப்பாக்கியை காட்டி மிரட்டி மீனவர்களை விரட்டினர்.
இரு படகுகளில் இருந்த மீனவர்கள் வலையை இழுக்க தாமதமானதால் ஆத்திரமடைந்த இலங்கை வீரர்கள், படகிலிருந்த மீனவர்கள் ஆரோக்கியசுகந்தன், 38, அருள்டிப்ஷன், 18, சாமுவேல், 19, அந்தோணி, 25, உள்ளிட்ட 21 மீனவர்களை கைது செய்தனர்.
அவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று, ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மீனவர்களை மார்ச் 27 வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

