21 தமிழக மீனவர்கள் கைது: தொடரும் இலங்கை கடற்படையினர் அத்துமீறல்
21 தமிழக மீனவர்கள் கைது: தொடரும் இலங்கை கடற்படையினர் அத்துமீறல்
ADDED : மார் 17, 2024 10:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, 2 விசைப்படகுகளுடன் 21 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள். விசாரணைக்கு பின்னர் 21 மீனவர்களையும் மயிலட்டி மீன்பிடி துறைமுகத்தில் வைத்து யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளனர்.

